என் வாத்தியார் கே.பி. - கமல் டுவீட்
ADDED : 1564 days ago
மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரின் 91வது பிறந்ததினம் இன்று. இதை முன்னிட்டு நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கமல் தனது டுவிட்டரில், ‛‛சினிமாவின் அத்தனை வகைமைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர் என் வாத்தியார் கேபி. 16வது வயதில் அவருடன் அறிமுகம் ஏற்பட்டது. எங்கள் குரு சிஷ்ய உறவுக்கு இது பொன்விழா ஆண்டு. அமரர் கே.பாலச்சந்தர் அவர்களை அவரது 91-வது பிறந்தாளில் நினைவு கூர்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.