உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆக. 6,ல் நவரசா ரிலீஸ்

ஆக. 6,ல் நவரசா ரிலீஸ்

ஒன்பது கதைகளை உள்ளடக்கிய நவரசா ஆந்தாலஜி படம் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. மணிரத்னமும், ஜெயேந்திரா பஞ்சாபகேசனும் இணைந்து தயாரித்துள்ளனர். மனிதனின் கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகியவற்றை மையமாக கொண்டு கதைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆக., 6ல் படம் வெளியாகிறது. விஜய்சேதுபதி, சூர்யா, அரவிந்த்சாமி, பாபிசிம்ஹா, யோகிபாபு, வாசுதேவ்மேனன், சித்தார்த், அதர்வா, அஞ்சலி, ரம்யாநம்பீசன், அதிதிபாலன், ரோகிணி, ரேவதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ப்ரியதர்ஷன், அரவிந்த்சாமி, சர்ஜுன், கார்த்திக்நரேன் உள்ளிட்ட பலர் இயக்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !