உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகை மிருதுளா திருமணம் : டி.வி நடிகரை மணந்தார்

நடிகை மிருதுளா திருமணம் : டி.வி நடிகரை மணந்தார்

பிரபல மலையாள நடிகை மிருதுளா விஜய். பிரிட்டீஷ் பங்களா, செலிபிரேசன், இன்பிடினிடி, டோக்கன் நம்பர் ப்ளீஸ், நெக்ஸ்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார், தமிழில் நூறாம் நாள், ஜெனிபர் கருப்பையா, கடன் அன்பை முறிக்கும் உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மலையாள சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் மிருதுளா, உடன் நடித்த நடிகர் யுவகிருஷ்ணாவை காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நேற்று எளிமையாக நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !