பாடல்களை ஏலத்தில் விடும் ஜி.வி.பிரகாஷ்
இப்போதெல்லாம் எல்லாமே ஆன்லைன் மயமாகி விட்டது. தங்கள் பொருட்களை ஏலம் விடும் வழக்கம் ஆன்லைனில் ஏற்கனவே தொடங்கி விட்டது. அந்த வரிசையில் இசை அமைப்பாளர்கள் தங்கள் பாடலை ஏலத்தில் விடும் முறை ஹாலிவுட், பாலிவுட்டில் ஏற்கெனவே தொடங்கி விட்டது.
தமிழில் இதனை ஜிப்ரான் தொடங்கி வைத்தார். அவர் இசை அமைத்த சாஹோ படத்திற்கு உருவான இசை ஒன்று அந்த படத்தில் பயன்படுத்தப்படவில்லை. அதனை அவர் ஏலத்துக்கு கொண்டு வந்தார். தற்போது அதே வழியில் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தான் உருவாக்கிய பாடல்களை ஆன்லைன் மூலம் ஏலத்துக்கு கொண்டு வருகிறார். முதல்கட்டடமாக அவர் 6 பாடல்களை ஏலம் விடுகிறார்.
இந்த ஆன்லைன் ஏலமுறை (என்எப்டி) முதன்முதலாக 2017ம் ஆண்டு கிரிப்டோகிட்டீஸ் என்ற ஆன்லைன் கேமில் தான் அறிமுகமானது. அந்த ஆன்லைன் கேமில் வரும் பூனைகளை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். இப்படித்தான் என்எப்டி நடைமுறைக்கு வந்தது. பூனையில் ஆரம்பித்தது தற்போது ரியல் எஸ்டேட் அளவு வளர்ந்து தற்போது இசைக்கும் வந்திருக்கிறது.