கோவில் சிலை திருட்டு பின்னணியில் உருவாகும் திகில் படம்
ADDED : 1565 days ago
ஜிபிஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் எஸ்.சிவபிரகாஷ் தயாரிப்பில் முழுக்க முழுக்க திகில் படம் ஒன்று உருவாகிறது. அறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை மற்றும் புதுமுகம் சோனியா நடிக்கிறார்கள். இயக்குனர் சதீஷ் சேகர் விஎப்எக்ஸ துறையில் பணியாற்றியவர். ஹீரோ தணிகை ஏற்கெனவே கருப்பு கண்ணாடி என்ற படத்தில் நடித்தவர். அருள்நிதியின் டைரி படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
பழங்காலக் கோவில் ஒன்றில் சிலை திருடு போக, அதைத் தொடர்ந்து பல கொடூர மரணங்கள் நிகழ்கிறது. அதற்கான காரணங்களை நாயகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதை சொல்லும் படமாக தயாராகிறது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.