மகேஷ்பாபுவுடன் ரொமான்ஸ் பண்ண தயாராகும் கீர்த்தி சுரேஷ்
ADDED : 1549 days ago
மகேஷ்பாபுவுடன் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் சர்காரு வாரி பாட்டா. வங்கி மோசடியை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி வரும் இப்படம் 2022 சங்கராந்திக்கு திரைக்கு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் மூன்று மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்தால் தான் திட்டமிட்டபடி சங்கராந்திக்கு படத்தை வெளியிட முடியும் என்பதால் விரைவில் ஐதராபாத்தில் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள். அதன் முதல்கட்டமாக மகேஷ்பாபு - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். அதனால் இன்னும் சில தினங்களில் ஐதராபாத்துக்கு செல்கிறார் கீர்த்தி சுரேஷ்.