உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 1980-ஸ் நடிகர்களின் சந்திப்பு

1980-ஸ் நடிகர்களின் சந்திப்பு

சினிமா உலகில் 1980 - 90களில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்த பல நடிகர், நடிகைகள் அவ்வப்போது சந்தித்து தங்களது கடந்த கால மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வதை கடைபிடித்து வருகிறார்கள். அந்தவகையில், 1980 காலகட்டத்தில் சினிமாவில் பிசியாக நடித்து வந்த நடிகர்- நடிகைகள் சிலருடன் தான் ஒரு வார இறுதி நாளில் சந்தித்ததாக தெரிவித்துள்ளார் நடிகை ராதிகா சரத்குமார்.

அதோடு, அந்த சந்திப்பை நிறைய சந்தோசங்களுடனும், சிரிப்புகளுடனும் கழித்தோம் என்று பதிவிட்டு அதுகுறித்த ஒரு போட்டோவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ராதிகா. அந்த போட்டோவில் ராதிகா சரத்குமாருடன் நடிகர் ரகுமான், அம்பிகா, ராதா, சுகாசினி, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு உள்ளிட்டோர் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !