உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகளை அறிமுகப்படுத்தும் மூடர் கூடம் நவீன்

மகளை அறிமுகப்படுத்தும் மூடர் கூடம் நவீன்

இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் 'தமிழரசன்', 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி', உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. இவற்றில் அக்னி சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனியுடன் அருண் விஜய் நடிக்கிறார். மூடர் கூடம் நவீன் இயக்குகிறார்.

இப்படத்தில் அக்ஷரா ஹாசன், சம்பத், ஜே சதீஷ்குமார், ரைமா சேனா, செண்ட்ராயன் மற்றும் பல முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர். நடராஜன் சங்கரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இயக்குனர் நவீனின் மகள் சீவின் அக்னிச் சிறகுகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் என் மகள் சீவீனுக்கு, ஒரு இயக்குநராக எப்படி அழுது நடிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தபோது, ஒரு தேர்ந்த நடிகை போல் அவள் என்னை உள்வாங்கும் அந்த அழகை இன்று ரசிக்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !