நல்லா இருக்குற தமிழ்நாட்டை பிரிக்காதீர்கள் - ரூ.5 லட்சம் நிதி வழங்கிய பின் வடிவேலு பேட்டி
ADDED : 1544 days ago
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் வடிவேலு. சில ஆண்டுகளாக நடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கும் வடிவேலு இன்று கொரோனா நிதி தருவதற்காக தலைமை செயலகம் வந்தார். தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 5 லட்சம் நிதியை நேரடியாக கொடுத்தவர் வெளியில் வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
நல்லதே நடக்கும்
பதில் - ஆட்சிக்கு வந்த ஒன்றரை மாதத்திலேயே மிக சிறப்பாக செயல்பட்டு உலகமே உற்று பார்க்கும் வகையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவுட்டார். அவரது ஒவ்வொரு செயல்பாடும் மெய்சிலிர்க்க வைக்கிறது. யார் மனதையும் புண்படுத்தாமல் அவர் எடுக்கும் நடவடிக்கைகள் நெகிழ வைக்கிறது.
கேள்வி - திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பின்னர் தான் படங்களில் நடிப்பது குறைந்தது. இப்போது மீண்டும் திமுக ஆட்சி வந்துள்ளதால் உங்களை அதிக படங்களில் பார்க்க முடியுமா?
பதில் - நல்லதே நடக்கும்.
கொங்கு நாடு
பதில் - ஒரு படத்தில் அல்வா வாசு என்னிடம் வந்து தெரிஞ்ச டாக்டர் கிளினிக் திறந்திருக்கார். ஒரு ஊசி போட்டு போங்க... என்று அழைப்பார். அதுபோல மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுகோள் வைக்கிறேன்.
கேள்வி - கொங்கு நாடு கோரிக்கை பற்றி?
பதில் - நல்லா இருக்குற தமிழ்நாட்டை பிரிக்காதீர்கள். நாடு நாடு என தனித் தனியாக பிரித்தால் என்ன ஆவது?
இவ்வாறு வடிவேலு பேட்டி அளித்தார்.