உடல் உறுப்பு தானம் செய்யுங்கள்: சரத்குமார் பிறந்தநாள் வேண்டுகோள்
ADDED : 1544 days ago
நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் இன்று (ஜூலை 14) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரையுலகினரும், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிறந்தநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைவரும் உடல் உறுப்புதானம் செய்ய வேண்டும், என்று கேட்டு கொண்டுள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: எனது பிறந்த நாள் செய்தியாக அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். உடல் உறுப்பு கிடைக்காமல் லட்சகணக்கானோர் மரணம் அடைவதை பார்க்கும்போது ரத்ததானம் செய்வது போன்று உடல் உறுப்புதானம் செய்வதும் மிகவும் அவசியம் என கருதுகிறேன். நான் ஏற்கெனவே உடல் உறுப்புதானம் செய்திருக்கிறேன். என் அன்பு சகோதர சகோதரிகளும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.