ஏமாற்றிய கணவருக்கு முத்தமிடும் ஸ்ரேயா
நடிகை ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடா என பல மொழிகளிலும் நடித்துள்ளார். ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரூ என்ற ரஷ்ய டென்னிஸ் வீரரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஸ்ரேயா சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். கணவருடன் இருக்கும் புகைப்படங்கள், சில குறும்பான வீடியோக்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார். இன்ஸ்டாவில் ஸ்ரேயாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரேயா சமீபத்தில் பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்ரேயாவை அவரது கணவர் ஏமாற்றும் வீடியோ அது. சில கார்டுகளை உடைத்து போட்டு மீண்டும் அதனை இணைப்பது போன்ற மேஜிக் காட்சிகளை அவரது கணவர் செய்துக்காட்டி ஏமாற்றும் வீடியோ. இறுதியில் ஸ்ரேயா தனது அழகான சிரிப்புடன் ஒரு ரியாக்ஷன் கொடுக்கிறார். அவரது கணவரை முத்தமிடுவது போல் வீடியோ முடிகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.