லிங்குசாமி படப்பிடிப்பு தளத்தில் ஷங்கர்
ADDED : 1808 days ago
ராம் சரண் நடிக்கும் படத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க் மற்றும் நடிகர் நடிகைகளை முடிவு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள டைரக்டர் ஷங்கர் தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில், ராம் பொத்னேனி, கிருத்தி ஷெட்டி நடிப்பில் லிங்குசாமி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. லிங்குசாமியின் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று அவரை வாழ்த்தியிருக்கிறார் ஷங்கர். மேலும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தில் நாயகன் ராம் பொத்னேனியின் அம்மா வேடத்தில் நதியா நடிக்கிறார்.