உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாகார்ஜூனா படத்தில் காஜல் அகர்வால்

நாகார்ஜூனா படத்தில் காஜல் அகர்வால்

ஆச்சார்யா, இந்தியன் 2 படங்களைத் தொடர்ந்து உமா, ரவுடிபேபி போன்ற படங்களில் நடிக்கும் காஜல் அகர்வால், நாகார்ஜூனாவுடனும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். பிரவீன் சத்தார் இயக்கும் இந்த படத்திற்கு ஆக்சன் திரில்லர் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 4 மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அடுத்த வாரத்தில் மீண்டும் நாகார்ஜூனா - காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஐதராபாத்தில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !