உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அனுஷ்கா படம் நிறுத்தப்பட்டதா?

அனுஷ்கா படம் நிறுத்தப்பட்டதா?

நிசப்தம் படத்தை அடுத்து தெலுங்கில் நவீன்பொலி ஷெட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் அனுஷ்கா நடிக்கப் போவதாக சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகி வந்தன. காதல் கதையில் உருவாக இருந்த இந்த படத்தை பி.மகேஷ் இயக்க, யு.வி.கிரியேஷசன்ஸ் தயாரிக்க திட்டமிட்டிருந்தது.

ஆனால் இப்போது வரை அப்படம் தொடங்கப்படவில்லை. சமீபத்தில் மீடியாக்களை சந்தித்த நவீன்பொலி ஷெட்டியிடம், அனுஷ்காவுடன் நடிக்கும் படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் வந்தால் மட்டுமே அது நடைபெறும் என்று தெரி வித்திருக்கிறார்.

இதையடுத்து அனுஷ்கா - நவீன்பொலி ஷெட்டி நடிக்கயிருந்த படம் நிறுத்தப்பட்டு விட்டதாக டோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !