கிரைம் ரிப்போர்ட்டராக மாறும் யாமி கவுதம்
ADDED : 1560 days ago
தமிழில் ராதா மோகன் இயக்கத்தில் வெளியான கவுரவம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை யாமி கவுதம். கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென திருமணம் செய்துகொண்டு, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தார். அதேசமயம் திருமணம் முடித்த கையோடு மீண்டும் நடிப்பு வேலையை பார்க்க வந்துவிட்டார் யாமி கவுதம்.
அந்தவகையில் லாஸ்ட் என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் யாமி கவுதம். இந்த தகவலை அவரே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் அனிருத்தா ராய் சவுத்ரி இயக்கும் இந்தப்படம் கொல்கத்தா நகர பின்னணியில் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் யாமி கவுதம் கிரைம் ரிப்போர்ட்டராக நடிக்க உள்ளார். அதுமட்டுமின்றி நடிகை பியா பாஜ்பாய் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.