ரியல் ஹீரோ தான் : விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த காயத்ரி ரகுராம்
ADDED : 1568 days ago
நடிகையும், பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம், சோசியல் மீடியாவில் பல அதிரடியான கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பு வளையத்திற்குள் இருந்து வருகிறார். இந்நிலையில் சொகுசு கார் தொடர்பாக நடிகர் விஜய்க்கு நேற்று நீதிபதி கண்டனம் தெரிவித்தது, அபராதம் விதித்தது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.
அதில், நடிகர் விஜய் ரியல் ஹீரோதான். அவர் பல ஏழைகளின் வாழ்க்கையில் இருக்கிறார். பிரதமர், முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு உதவி செய்திருக்கிறார். பல மாணவர்களை படிக்க வைக்கிறார். ரசிகர்களின் குடும்பங்களுக்கு உதவுகிறார். அதனால் இதையெல்லாம் மறந்து விட்டு நீதிமன்றத்தில் நடந்ததையே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அவர் செய்து வரும் நல்ல விசயங்களை மறக்கக் கூடாது என்று விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் காயத்ரிரகுராம்.