ரோர் ஆப் ஆர்ஆர்ஆர் - ராஜமவுலியின் அடுத்த அசத்தல், அதிரடி
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவகன், ஆலியா பட், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் ஆர்ஆர்ஆர். இப்படத்தின் புதிய வீடியோ ரோர் ஆப் ஆர்ஆர்ஆர் என வெளியிடப்பட்டது.
இந்த வீடியோ முழுவதும் படத்தின் மேக்கிங் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. சாதாரண படத்தை, தற்காலக் கதையில் உருவாக்கப்படும் படங்களுக்கான மேக்கிங்கிற்கும், ஆர்ஆர்ஆர் போன்ற பீரியட் படங்களுக்கான மேக்கிங்கிற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கும்.
இந்த மேக்கிங் வீடியோவைப் பார்த்த போது ஹாலிவுட் படங்களுக்கு இணையான மேக்கிங்கைப் பார்க்கும் அனுபவமே ஏற்படுகிறது. ஒரு யு டியூப் வீடியோவைப் பார்ப்பதற்கே இந்த அளவிற்கு இருக்கிறதென்றால் படத்தைப் பார்க்கும் போது அது இன்னும் அசத்தலாக, அதிரடியாக இருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.
தென்னிந்திய சினிமாவை, இந்திய சினிமாவை, தெலுங்கு சினிமாவை மற்றுமொரு புதிய தளத்திற்கு அழைத்துச் செல்லும் அளவிற்கு ராஜமௌலியும் அவரது ஆர்ஆர்ஆர் குழுவினரும் வேலை பார்த்து வருகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.