சில நேரங்களில் சில மனிதர்கள்
ADDED : 1543 days ago
ஓ மை கடவுளே படத்தின் வெற்றிக்கு பின் கவனிக்கப்படும் நடிகராகிவிட்டார் அசோக் செல்வன். தற்போது ஹாஸ்டல், தீனி போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்தப்படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. இந்நிலையில் அடுத்தப்படியாக 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகர் நாசர் மகன் அபி ஹாசனும் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். அஞ்சு குரியன், ரித்விகா நாயகிகளாக நடிக்க, விஷால் வெங்கட் இயக்குகிறார். இப்படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.