மீண்டும் அதர்வாவை இயக்கும் சற்குணம்
ADDED : 1644 days ago
களவாணி, வாகை சூட வா படங்களின் இயக்குனர் சற்குணம், ‛சண்டிவீரன்' படத்திற்கு பின் மீண்டும் அதர்வாவை நாயகனாக கொண்டு ஒரு படத்தை இயக்குகிறார். இதில் ராஜ்கிரண், ராதிகா, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் ஆரம்பமானது. இதுவும் அழுத்தமான கதைக்களத்துடன் பக்கா கிராமத்து கதையில் உருவாகுவதாக கூறப்படுகிறது.