‛உறியடி' விஜய் குமாரின் அடுத்த படம் துவக்கம்
ADDED : 1644 days ago
உறியடி, உறியடி 2 படங்களை எழுதி, இயக்கி, நடித்த விஜய் குமார் அடுத்து ஒரு படத்திதல் நாயகனாக நடிக்கிறார். இதை அவரிடம் உதவியாளராக இருந்த அப்பாஸ் இயக்குகிறார். ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிக்கிறார். விஜய் குமாருக்கு ஜோடியாக அர்ஷா எனும் நடிகை அறிமுகமாகிறார். இவர்களுடன் நடிகர்கள் சங்கர் தாஸ், அவினாஷ் , கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் ரவி வர்மனிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரிட்டோ இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். லைப் ஸ்டைல் ஆக்சன் டிராமா வகையில் தயாராகும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு நடைபெறுகிறது.