இயக்குனர் ராம்நாத் - கருணாஸ் மீண்டும் இணையும் ஆதார்
ADDED : 1544 days ago
நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ஆதார் என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதை அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள்: ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பி. எஸ். ராம்நாத் இயக்குகிறார்.
கருணாஸ் ஜோடியாக பிக்பாஸ் புகழ் நடிகை ரித்விகா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் அருண்பாண்டியன், வத்திக்குச்சி படப்புகழ் திலீப், பாகுபலி பட புகழ் பிரபாகர், நடிகை மனிஷா யாதவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீ காந்த் தேவா இசை அமைக்கிறார்.
ஆதார் படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் அழகம்மை மகன் சசிக்குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.