பெரிய திரைக்கு திரும்பும் ஜித்தன் ரமேஷ்
ADDED : 1542 days ago
பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மூத்த மகன் ரமேஷ். ஜித்தன் படத்தில் அறிமுகமானதால் ஜித்தன் ரமேஷ் என்று அழைக்கப்படுகிறார். ஜித்தன் படம் வெற்றி பெற்றாலும் அதற்கு பிறகு அவர் நடித்த ஜெர்ரி, நீ வேணுண்டா செல்லம், புலி வருது, பிள்ளையார் கோவில் முதல் தெரு, ஜித்தன் 2 படங்கள் அவருக்கு சரியான அளவில் உதவவில்லை.
இதனால் சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். பிக்பாஸ் 4வது சீசனில் கலந்து கொண்டார். இப்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் மீண்டும் பெரிய திரைக்கு திரும்புகிறார். மஸ்ட் வாட்ச் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ள அவர், தான் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் ரஞ்சித் கண்ணா இயக்குகிறார். முன்னணி நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.