உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா

வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா

தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவரை ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பன்முக திறமைக்கொண்ட இவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார். மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிப்பை தாண்டி சமூக நலனிலும் அக்கறை கொண்டவர்.

அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் ஆண்ட்ரியா தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது.

கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு 16 நாட்கள் முடிவுடைந்துள்ளதாகவும், விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகார்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !