ஓடிடியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் படம்
ADDED : 1537 days ago
தமிழில் பொன்னியின் செல்வன், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக் என பல படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அவர் நடித்துள்ள திட்டம் இரண்டு என்ற படம் ஜூலை 30-ந்தேதி சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதே ஓடிடி தளத்தில் ஏற்கனவே தேன், வாழ் போன்ற படங்கள் வெளியான நிலையில் அடுத்த மாதத்தில் நரகாசூரன், கடைசி விவசாயி போன்ற படங்களும் ஒளிபரப்பாக உள்ளன.