உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சண்டைக்காட்சியில் விபத்து : விஷாலுக்கு பிசியோதெரபி சிகிச்சை

சண்டைக்காட்சியில் விபத்து : விஷாலுக்கு பிசியோதெரபி சிகிச்சை

நடிகர் விஷால் - து.பா.சரவணன் கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது. விஷாலின் 31வது படமாக உருவாகும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

கொரானா ஊடரங்கு தளர்வு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொடங்கியது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை வெளியிட்டிருந்தார் விஷால் இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

இதில் விஷாலை ஒருவர் தாக்க, பின்புறமாக ஒரு இடத்தில் சாய்ந்து விழுகிறார். அப்போது முதுகில் காயம் ஏற்பட்டு வலியால் துடிக்கிறார் விஷால். அதன்பிறகு உடனடியாக மருத்துவர் அணுகி பரிசோதித்த பிறகு பிசியோதரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்பு சிறிது நேரம் தடைப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !