சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பெண்களை விபசாரத்தில் தள்ளிய தயாரிப்பாளர் கைது
ADDED : 1539 days ago
மும்பையில் உள்ள மிராரோடு சாந்தி நகர் பகுதியில் விபசாரம் நடந்து வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் போலி வாடிக்கையாளர் ஒருவரை அங்கு அனுப்பி விசாரித்தனர். இதில் பிரபல இந்திப்பட தயாரிப்பாளர் கன்யாலால் பால்சந்தானி மற்றும் அவருக்கு உதவியாக வனிதா இங்கலே உள்பட 3 பேர் சேர்ந்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தி 3 பேரை கைது செய்தனர்.
மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறி, பெண்களை விபசாரத்தில் தள்ளியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.