மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
1506 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
1506 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
1506 days ago
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கில், அபராத தொகையை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் வழங்க வேண்டும் என்றும் வரி என்பது நன்கொடை அல்ல, கட்டாய பங்களிப்பு. நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இல்லாமல், ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் என என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறியிருந்தார்.
இந்நிலையில், தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் செய்த மேல்முறையீட்டு மனு இன்று நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. அபராதம் விதித்ததையும், தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்ட வார்த்தைகளை நீக்க கோரியும் விஜய் மனு தாக்கல் செய்து இருந்தார். கடந்த வாரம் வெளியான தீர்ப்பின் நகல் இன்னும் வராததால் இன்று இந்த வழக்கு பட்டியலிடப்படவில்லை. தீர்ப்பின் நகல் இல்லாமல் வழக்கை பட்டியலிட உத்தரவிடக்கோரி விஜய் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு ஏற்றக் கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அனேகமாக அடுத்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
1506 days ago
1506 days ago
1506 days ago