மகளின் பிறந்தநாள் - ஒரு கிராமத்துக்கே தடுப்பூசி வழங்கிய மகேஷ்பாபு
ADDED : 1541 days ago
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு. இவருடைய மகள் சித்தாரா. இவர் நேற்று தனது 9 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனையொட்டி நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கானா மாநிலத்தின் சித்தாபூர் கிராம மக்களுக்கு தனது சொந்த செலவில் இலவச தடுப்பூசி வழங்கினார்.
சமீபத்தில், தனது தந்தையும், பிரபல நடிகருமான கிருஷ்ணாவின் 78வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள புர்ரிபாலம் கிராம மக்கள் அனைவருக்கும் மருத்துவமனைகளுடன் இணைந்து தனது சொந்த செலவில் தடுப்பூசியை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், மகேஷ் பாபுவின் ரசிகர்களும், ஆதரவற்றவர்களுக்கு உணவும், ஆதரவற்ற இல்லங்களுக்கு மளிகைப்பொருட்களும் வழங்கி வருகின்றனர்