கங்கை நதியில் படகு சவாரி செய்த காஜல் அகர்வால்
ADDED : 1621 days ago
காஜல் அகர்வால் கதையின் நாயகியாக நடித்து வரும் உமா என்ற ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு தற்போது கோல்கட்டாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனது கணவர் கெளதம் கிச்சுலுவுடன் அங்குள்ள பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார் காஜல். கோல்கட்டாவில் உள்ள புகழ் பெற்ற காளி கோயிலுக்கு சென்றவர், கங்கை நதியில் படகு சவாரி செய்துள்ளார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதோடு, அமைதி, சாரல், பனோரமிக் எல்லாம் ஒரே நேரத்தில்! மேகங்கள் நடனத்துடன் நாடகம் சேர்க்கிறது. நீங்கள் கங்காம்மா எவ்வளவு அழகாகவும், அற்புதமாகவும் இருக்கிறீர்கள். என் இதயம் நிரம்பியுள்ளது. மற்றவர்களின் பாவங்களை இன்னும் அழகாக எடுத்துக்கொள்கிறது என்று பதிவிட்டுள்ளார் காஜல்அகர்வால்.