உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினிக்கு ஜோடியாக தீபிகாவா

ரஜினிக்கு ஜோடியாக தீபிகாவா

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருந்த படம் ராணா. இப்படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற அன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுமருத்துவமனையில்அனுமிக்கப்பட்டார் ரஜினி. அதையடுத்து சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு சென்னை திரும்பினார்.

அதையடுத்து ராணா படம் தொடங்கப்படவில்லை. இதனால் ரஜினியுடன் முதன்முதலாக தீபிகா படுகோனே ஜோடி சேர இருந்தது தடைபட்டது. இருப்பினும் அதையடுத்து செளந்தர்யா ரஜினி இயக்கிய கோச்சடையான் என்ற அனிமேசன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் தீபிகா படுகோனே.

இந்தநிலையில் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்துள்ள ரஜினி அடுத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அப்படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடிக்கப்போவதாக தற்போது ஒரு புதிய செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !