பிறந்தநாளோடு மகன் பெயர் சூட்டும் விழாவையும் கொண்டாடிய யோகிபாபு
ADDED : 1538 days ago
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. சமீபகாலமாக தனக்கு ஏற்ற படங்களில் நாயகனாகவும் ஜொலித்து வருகிறார். சமீபத்தில் அவர் நாயகனாக நடித்து டிவியில் வெளியான மண்டேலா படம் நல்ல வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்றது. இந்நிலையில் யோகிபாபு நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய அவர், வீட்டில் மற்றொரு நிகழ்வையும் நடத்தி உள்ளார். யோகிபாபுவுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. முருக பக்தரான யோகி பாபு, குழந்தைக்கு விசாகன் என பெயர் சூட்டி அதற்கான விழாவையும் குடும்பத்தினர் உடன் நேற்று கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இந்த நிகழ்வில் இயக்குனர் சுந்தர் சி கலந்து கொண்டார்.