தந்தையின் படத்தலைப்பையே தனக்கு சொந்தமாக்கிய சூர்யா
ADDED : 1540 days ago
இயக்குனர் பாண்டிராஜ், சூர்யா படத்தை இயக்குகிறார். இப்படம் ஆக்சன் படமாக உருவாகிறது. சூர்யாவின் 40வது படமாக உருவாகும் இந்தப்படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாளன்று டைட்டிலும் அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே வெளியான பர்ஸ்ட்லுக் போஸ்டர்களுடன், தற்போது ஆக்சன் படம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அழகிய தமிழில் பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் இருந்தாலும் தெலுங்கு டப்பிங் பட டைட்டில் போல இருப்பதாக சிலர் கமென்ட் அடித்து வந்தனர்.
இந்தநிலையில் இந்தப்படத்தின் டைட்டிலை சூர்யா தனது தந்தை சிவகுமாரிடம் இருந்தே பெற்றுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.. ஆம் 1977ல் இதே பெயரில் வெளியான ஒரு படத்தில் கௌபாய் கேரக்டரில் நடித்துள்ளார் சிவகுமார். அந்தப்படத்தின் போஸ்டரும் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.