உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கணவருடன் பிரச்னையில்லை : பிரியாமணி

கணவருடன் பிரச்னையில்லை : பிரியாமணி

தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி கர்நாடகத்தை சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தபாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். முஸ்தபாவுக்கு ஏற்கெனவே ஆயிஷா என்பவருடன் திருமணம் நடந்திருக்கிறது. அவரை முறைப்படி விவாகரத்து செய்து விட்டதாக கூறி அவர் பிரியமணியை திருமணம் செய்துள்ளார்.

ஆனால் தற்போது ஆயிஷா, நாங்கள் விவாகரத்து செய்யவில்லை. என் கணவர் பிரியாமணியை திருமணம் செய்து கொண்டது சட்டப்படி செல்லாது என்று பிரச்சினையை கிளப்பி உள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியாமணி தன் கணவரை பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரியாமணி கூறியிருப்பதாவது: எனது கணவர் முஸ்தபாவும், நானும் நல்ல அன்புடன் இருக்கிறோம். எங்கள் உறவில் எந்த விரிசலும் இல்லை. அவர் தற்போது அமெரிக்காவில் வேலை செய்து கொண்டு இருக்கிறார். ஆனாலும் ஒருவருக்கொருவர் தினமும் பேசிக்கொள்கிறோம். பேச முடியாவிட்டால் மெசேஜ் அனுப்பிக் கொள்கிறோம். தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம். என்கிறார் பிரியாமணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !