யாவரும் வல்லவரே படத்தில் கதையின் நாயகியாக ரித்விகா
ADDED : 1541 days ago
வால்டர், பாரிஸ் ஜெயராஸ், பார்டர் படங்களை தயாரித்த 11:11 புரொடக்ஷன் சார்பில் டாக்டர் பிரபு திலக் தயாரிக்கும் படம் யாவரும் வல்லவரே. என்.ஏ.ராஜேந்திர சக்வர்த்தி இயக்குகிறார். இதில் ரித்விகா கதையின் நாயகியாக நடிக்கிறார்.
ரித்விகாவுடன் சமுத்திரகனி, யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மெயில்சாமி, ஜோ மல்லூரி, போஸ்டர் நந்தகுமார், சைத்தான் அருந்ததி மேனன், மற்றும் தேவ தர்ஷினி ஆகியோர் நடிக்கின்றனர். ஜாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். கிராமிய பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.