நெகட்டிவ் ரோல்களுக்கு தடா போடும் தமன்னா
ADDED : 1547 days ago
தற்போது தமிழில் படவாய்ப்புகள் இல்லாத தெலுங்கில் சீட்டிமார், மேஸ்ட்ரோ, எப்-3 என சில படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. அதோடு வெப் சீரிஸ்களிலும் நடிக்கிறார். இதையடுத்து வருண் தேஜ் நடிக்கும் கனி என்ற ஆக்சன் படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடுகிறார். இதற்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது. மேலும், இதற்கு முன்பும் தெலுங்கு, கன்னடத்தில் அரை டஜன் படங்களில் சிறப்பு பாடல்களில் நடனமாடியிருக்கிறார் தமன்னா.
அதோடு, இப்படி ஹீரோயினாக நடித்துக் கொண்டே சிங்கிள் பாடல்களுக்கும் நடனமாடும் தமன்னா, வில்லி மற்றும் கெஸ்ட் ரோல்களில் நடிப்பதில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை என்கிறார். அதனால் அதுபோன்ற வேடங்களில் நடிக்க நட்புக்குரியவர்கள் அழைத்தாலும், தனது மனநிலையை சொல்லி கண்டிப்பாக தவிர்த்து விடுவாராம்.