துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது!
ADDED : 37 minutes ago
'லக்கி பாஸ்கர்' படத்தை அடுத்து துல்கர் சல்மான் தற்போது நடித்துள்ள படம் 'காந்தா'. செல்வமணி செல்வராஜ் என்பவர் இயக்கி உள்ள இந்த படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம். கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி உள்ளது. இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பாக்ய ஸ்ரீ நடிக்க, சமுத்திரக்கனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தமிழில் உருவாகியுள்ள இந்த படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. இந்த காந்தா படம் வருகிற நவம்பர் 14ம் தேதி திரைக்கு வருவதாக இன்று அறிவித்துள்ளார்கள். இப்படத்தை நடிகர் ராணா மற்றும் நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் ஸ்பிரிட் மீடியா மற்றும் வேபேரர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து உள்ளார்கள்.