உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால்

நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால்


நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது அவரது யூடியூப் சேனலில் ஒரு பாட்கேஸ்ட் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் விருதுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, விருதுகள் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. அது பைத்தியக்காரத்தனம். நான் தேசிய விருதுகளையும் சேர்த்து தான் கூறுகிறேன். 7 கோடி மக்களுக்கும் சேர்த்து இவர் தான் சிறந்த நடிகர், இதான் சிறந்த படம் சொல்ல இவங்க என்ன மேதாவிகளா?

நீங்கள் சர்வே எடுங்கள், மக்கள் சர்வே தான் முக்கியம். நீங்க 8 பேரு முடிவு செய்வது தான் புல் சிட். எனக்கு விருதுகள் தராததால் இதை நான் கூறவில்லை. நான் விருது வாங்கினாலும், போகும் வழியில் குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவேன், அது தங்கமாக இருந்தால் அடகு வைத்து அந்தப் பணத்தில் அன்னதானம் செய்வேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !