முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா!
நடிகை சம்யுக்தா மலையாள படங்களின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின்னர் தெலுங்கில் 'டெவில், பீம்லா நாயக், விருபாக்ஷா' ஆகிய படங்களின் மூலம் பிஸியான நடிகையாக மாறினார். மேலும், தனுஷின் 'வாத்தி' படத்தில் நடித்தது மூலம் சம்யுக்தா தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மூலம் பிரபலமான நடிகையானார்.
தற்போது முதல்முறையாக சம்யுக்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படத்தை அறிவித்துள்ளனர். யோகேஷ் கே.எம்.சி இயக்கத்தில் சம்யுக்தா நடிக்கும் இந்த படத்திற்கு 'தி பிளாக் கோல்ட்' என தலைப்பு வைத்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் ரயில் நிலையத்தில் கையில் துப்பாக்கியுடன் எதிரிகளை சுட்டுவீழ்த்தி சம்யுக்தா நடந்து வருவது போன்று காட்சி அமைந்துள்ளது. அஷ்யா மூவிஸ், மகாந்தி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.