2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்'
ADDED : 9 minutes ago
ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானாவுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'தம்மா' என்ற படம் அக்டோபர் 21ம் தேதியான நாளை வெளியாக உள்ளது. திகில் நகைச்சுவை கலந்த கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் காட்டேரி வேடத்தில் ராஷ்மிகா நடித்திருக்கிறார். இந்த படத்திற்கான புரமோஷனில் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டு வந்தார் ராஷ்மிகா.
இந்த நிலையில் அடுத்தபடியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பில் நவம்பர் முதல் வாரத்தில் திரைக்கு வரப்போகும் படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்'. தெலுங்கில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அடுத்து பங்கேற்க போகிறார் ராஷ்மிகா. இந்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டு ஹிந்தி படங்களும், ஒரு தெலுங்கு படமும் அவரது நடிப்பில் வெளியான நிலையில், தி கேர்ள் ப்ரெண்ட் 2025ம் ஆண்டில் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் வெளியாகும் இறுதி படமாக இருக்கப் போகிறது.