மீண்டும் த்ரில்லர் படத்தில் நடிக்கிறார் நயன்தாரா
ADDED : 1544 days ago
மாயா, டோரா, ஐரா, நிழல்(மலையாளம்) உள்ளிட்ட த்ரில்லர் படங்களில் நடித்த நயன்தாரா மீண்டும் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்புகள் சத்தமின்றி தொடங்கி உள்ளது. வெங்கட்பிரபுவின் உதவியாளர் ஜி.எஸ்.விக்னேஷ் இயக்குகிறார். அவர் சொன்ன கதை நயன்தாராவுக்கு மிகவும் பிடித்து விடவே மற்ற படங்களில் இருந்து தேதி வாங்கி இந்த படத்திற்கு தேதி கொடுத்திருக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது. 2வது கட்ட படப்பிடிப்பு கோவையை சுற்றி நடக்கிறது. மாயா படத்திற்கு இசை அமைத்த ரான் ஈதன் யோஹன் இதற்கு இசை அமைக்கிறார். தமிழ் ஒளிப்பதிவு செய்கிறார்.