உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெற்றிகரமாக 2-வது சீசனில் டான்ஸ் VS டான்ஸ்: கலைக்கட்டும் புரோமோ

வெற்றிகரமாக 2-வது சீசனில் டான்ஸ் VS டான்ஸ்: கலைக்கட்டும் புரோமோ

டான்ஸ் VS டான்ஸ் நிகழ்ச்சியின் முதலாவது சீசனின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சீசன் 2 விரைவில் வரவிருக்கிறது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் VS டான்ஸ் நிகழ்ச்சியின் முதலாவது சீசன் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்துள்ளது. சீசன் 2-விற்காக உருவாக்கப்பட்ட புரோமோ தற்போது அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

அந்த புரோமோவில் தமிழ் உயிர் எழுத்துகளான அ முதல் ஃ வரை பொருத்தி ராப் இசையில் பாடலை பாடியுள்ளனர். அதேபோல் தமிழகத்தின் பல்வேறு வகையான கலாச்சாரங்களையும், பல்வேறு வகையான நடனங்களையும் அழகாக காட்சிபடுத்தியுள்ளனர். இரண்டாவது சீசனுக்கான புரோமோ, மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !