அஞ்சலியின் அசாத்திய திறமை
ADDED : 1534 days ago
நடிகை அஞ்சலிக்கு தமிழில் படவாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுங்கு, கன்னடத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ, வீடியோக்களை பதிவிடுவார். தற்போது தலைகீழாக தான் தொங்கியபடி யோகாசனம் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி உள்ளார். அஞ்சலி வெளியிட்டுள்ள அந்த போட்டோக்களுக்கு ரசிகர்கள் ஆச்சர்யம் கலந்த கமெண்டுகளை கொடுத்து வருகிறார்கள்.