குழந்தை பெற்று திருமணம் செய்யாமலே காதலனை பிரிந்தாரா எமி ஜாக்சன்?
ADDED : 1578 days ago
ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தில் தமிழுக்கு வந்தவர் லண்டன் நடிகை எமிஜாக்சன். அதன்பிறகு தாண்டவம், ஐ, தெறி, 2.0 என பல படங்களில் நடித்தார். 2.0 படத்தில் நடித்த பிறகு தனது காதலர் ஜார்ஜ் பனாயிடோ உடன் நிச்சயதார்த்தம் மட்டும் நடந்த நிலையில் அவரை திருமணம் செய்யாமலேயே 2019ல் ஒரு குழந்தை பெற்றுக் கொண்டார் எமி.
அதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறார். இந்த நிலையில் எமிஜாக்சன் இன்ஸ்டாகிராமில் ஜார்ஜ் பனாயிடோ சம்பந்தப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இதனால் இருவரும் பிரிந்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இது குறித்து எமி ஜாக்சன் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.