அபராத தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முடியாது : விஜய் தரப்பு பதில்
ADDED : 1581 days ago
வெளிநாட்டு சொகுசு கார் வழக்கின் தீர்ப்பில் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதையடுத்து விஜய் தரப்பில் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். அந்த மனு குறித்து நேற்று விசாரணை நடந்தபோது, தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
அதையடுத்து இன்றும் அந்த சொகுசு காரின் வரி விலக்கு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் இந்த ஒரு லட்சம் அபராத தொகையை ஏன் நீங்கள் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அபராத தொகையை நிவாரண நிதிக்கு கொடுக்க விரும்பவில்லை. காரணம் ஏற்கனவே கடந்தாண்டு விஜய் ரூ. 25 லட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக விஜய் வழங்கியிருக்கிறார் என்று விஜய் தரப்பில் இருந்து பதில் கொடுக்கப்பட்டுள்ளது.