மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1500 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1500 days ago
'வலிமை அப்டேட், வலிமை அப்டேட்' என அஜித் ரசிகர்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் கேட்டதால் 'அப்டேட்' என்ற வார்த்தை சினிமா ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சில படங்களைப் பற்றிய 'அப்டேட்'டை ரசிகர்களும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
அந்த விதத்தில் மணிரத்னம் இயக்கி வரும் சரித்திரப் படமான 'பொன்னியின் செல்வன்' பற்றி மற்றுமொரு அப்டேட் இப்போது தெரிய வந்துள்ளது.
“ப பாண்டி, சேதுபதி, மாரி 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய படங்களில் சிறுவனாக நடித்த மாஸ்டர் ராகவன் அவருடைய இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா ராயுடன் எடுத்த செல்பி புகைப்படங்களைப் பதிவிட்டு, “பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு இடைவேளையில் ஐஸ்வர்யா ராய் மேடத்துடன்... அவருடன் நடிப்பது மிகப் பெரும் அனுபவம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய அந்தப் பதிவில் ஒரு ரசிகர் எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு வேறொரு ரசிகர் 'பாண்டிய இளவரசர்' என பதிலளித்திருக்கிறார். 'பொன்னியின் செல்வன்' நாவலில் 'பாண்டிய இளவல்' என்ற சிறுவன் கதாபாத்திரம் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று.
ஐஸ்வர்யா ராயுடன் ராகவன் எடுத்த செல்பியைப் பார்த்து பொறாமைப்படும் ரசிகர்கள், “யாருடா நீல இப்படி கலக்குற, ஐஸ்வர்யாவுடன் புகைப்படம் எடுத்த லக்கி பையன், செமடா தம்பி” என பொறாமையுடன் பாராட்டி கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.
1500 days ago
1500 days ago