இது நயன்தாராவின் சுட்டெரிக்கும் ‛நெற்றிக்கண் - ஆக., 13ல் ஓடிடியில் வெளியீடு
ADDED : 1529 days ago
அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‛நெற்றிக்கண். அஜ்மல் வில்லனாக நடித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள முதல் படம் இது. இப்படத்தில் நயன்தாரா பார்வையற்றவராக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். சைகோ கொலைக்காரன் அஜ்மலை, பார்வையற்ற நயன்தாரா எப்படி எதிர்கொண்டு, அவரை எப்படி பழி வாங்குகிறார் என்பதே கதை என்பதை டிரைலரை பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடிகிறது.
மேலும் டிரைலருக்கு கேப்ஷனாக ‛‛இருக்கும் கண்கள் மூடினால், மூன்றாவது கண் திறக்கும்! இது நயன்தாராவின் சுட்டெரிக்கும் நெற்றிக்கண் என விளம்பரப்படுத்தி உள்ளனர். இந்த வார்த்தை சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதோடு ஏற்கனவே வெளியான தகவல்படி இந்த படம் ஓடிடியில் வெளியாகிறது. படத்தை வருகிற ஆக., 13ம் தேதி டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிடுகின்றனர்.