கமல் தாலி எடுத்து கொடுக்க... கன்னிகாவை மணந்தார் சினேகன்
ADDED : 1635 days ago
தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியர் சினேன். சில படங்களில் நடித்தும் உள்ளார். கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். பின்னர் கமலின் மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். தற்போது அந்த கட்சியின் இளைஞர் அணி செயலாளராக இருக்கிறார்.
இந்நிலையில் சினேகன், நடிகை கன்னிகா ரவியை காதலித்து வந்தார். இவர்களது திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் இன்று(ஜூலை 29) காலை 10:45 மணி அளவில் சென்னை வடபழனி உள்ள தனியார் ஹோட்டலில் சிறப்பாக நடந்தது. நடிகர் கமல்ஹாசன் முன்னின்று தாலி எடுத்து கொடுத்து இந்த திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த திருமண நிகழ்வில் இயக்குனர் பாரதிராஜாவும் பங்கேற்றார். அதோடு மக்கள் நீதி மையம் முக்கிய நிர்வாகிகளும், இருவீட்டாரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்றனர்.