உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரித்விராஜின் ‛குருதி' ஆக.,11ல் ஒடிடியில் ரிலீஸ்

பிரித்விராஜின் ‛குருதி' ஆக.,11ல் ஒடிடியில் ரிலீஸ்

மலையாளத்தில் பிரித்விராஜ் நடித்த படங்கள் தியேட்டர் திறப்புக்காக காத்திருக்காமல் ஒடிடியில் ரிலீசாக ஆரம்பித்துவிட்டன. அந்தவகையில் கடந்த மாதம் அவர் நடித்த கோல்ட் கேஸ் படம் வெளியானது. இதையடுத்து அவர் நடித்துள்ள 'குருதி' படமும் வரும் ஆக-11ஆம் தேதி அமேசான் பிரைம் ஒடிடியில் வெளியாகிறது. கோல்ட் கேஸ் படத்தைப்போல, இந்தப்படத்தின் தயாரிப்பாளரும் பிரித்விராஜ் தான் என்பதால் ஒடிடி ரிலீஸ் என துணிந்து முடிவெடுத்துள்ளார்.

அறிமுக இயக்குனர் மனு வாரியர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பாடல்கள், சண்டை காட்சிகள், காட்டிற்குள் சேசிங் காட்சிகள் என அனைத்து அம்சங்களையும் கொண்ட ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ளது. அதுமட்டுமல்ல வெறும் 23 நாட்களில் படத்தை எடுத்து முடித்து ஆச்சர்யப்படுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !