எம்மதமும் என் மதமே : ராமராஜன்
ADDED : 1631 days ago
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் ராமராஜன். இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் வெள்ளி விழா படங்களாக அமைந்தன. பின்னர் அரசியல் என தனது பயணம் மாறியதால் சினிமாவை விட்டு ஒதுங்கினார். சமீபத்தில் கொரோனாவால் பாதித்த நடிகர் ராமராஜன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டதாக தகவல் பரவியது.
இதுகுறித்து ராமராஜன் கூறியுள்ளதாவது: கொரோனாவில் இருந்து இப்போது தான் மீண்டுள்ளேன். நான் நடிகனான போதே எம்மதமும் சம்மதம் என்றாகி விட்டேன். மூன்று மதமும் என் மதமே. கோவிலுக்கும் போவேன், தர்காவுக்கும் போவேன். அரசியலிலும் வந்த பின், ஒரு மதத்தில் மட்டும் நான் எப்படி இருக்க முடியும். எல்லாருமே எனக்கு வேண்டும். சாதியும், மதமும் நான் பார்ப்பதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.