உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாய்வாலே : டீ நிறுவனத்தில் முதலீடு செய்த நயன்தாரா

சாய்வாலே : டீ நிறுவனத்தில் முதலீடு செய்த நயன்தாரா

பெரும்பாலான நடிகைகள் ரியஸ் எஸ்டேட், தங்க நகைகளில் முதலீடு செய்து வரும் நிலையில், நடிகை நயன்தாராவும் சிலவற்றில் முதலீடு செய்திருந்தாலும் தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார். அதோடு அவர் சாய்வாலே என்ற டீ நிறுவனத்தில் ஒரு பங்குதாரராகி முதலீடு செய்திருக்கிறார்.

வட இந்தியாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் விரைவில் சென்னை, பெங்களூர் உள்பட தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களிலும் தங்களது 35 கிளைகளை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்காரணமாக ரூ. 5 கோடியை முதலீட்டாளர்களிடம் எதிர்பார்க்கும் இந்த சாய்வாலே டீ நிறுவனம் மேலும் சில நிறுவனங்களையும் தங்களது பங்குதாரர்களாக இணைத்துக் கொண்டு வருகிறது. இதில் தான் நயன்தாரா, விக்னேஷ் சிவனும் ஒரு பங்குதாரராக இணைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !